MARC காட்சி

Back
திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில்
245 : _ _ |a திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில் -
246 : _ _ |a திருஆதனூர், பார்க்கவ க்ஷேத்திரம்
653 : _ _ |a கோயில், பெருமாள், திவ்யதேசம், மங்களாசாசனம், வைணவம், விஷ்ணு, திருஆதனூர், பார்க்கவ சேத்திரம், ஆண்டளக்கும் ஐயன்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 2
910 : _ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 10.97648035
915 : _ _ |a 79.31203615
916 : _ _ |a ஆண்டளக்கும் ஐயன்
917 : _ _ |a அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)
918 : _ _ |a பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி
922 : _ _ |a புன்னை, பாடலி
923 : _ _ |a சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
924 : _ _ |a பாஞ்சராத்திரம்
926 : _ _ |a பங்குனி உத்திரம், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, உறியடி உற்சவம்
927 : _ _ |a சரபோஜி மன்னருக்கும், இத்தலத்திற்கும் தொடர்புகள் இருந்ததை கல்வெட்டுக்களிலும், ஓலைச்சுவடிகளாலும் அறியமுடிகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a ஸ்ரீ ஆண்டளக்குமையன் புஜங்க சயனத் திருக்கோலத்தில் தலையின் கீழே மரக்கால், இடது கையில் ஓலை எழுத்தாணி, காலடியில் காமதேனு திருமங்கையாழ்வார், தாயார் ஸ்ரீரங்க நாயகியார், உற்சவர் அழகிய மணவாளன் ஆகிய செப்புத்திருமேனி உருவங்கள் காணப்படுகின்றன. இத்தலத்தில் காமதேனுவுக்கும்,காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு.
930 : _ _ |a பிர்ம்மாண்ட புராணத்தின் 3வது பிரிவில் இத்தலம்பற்றி பேசப்படுகிறது. ஆவாகிய காமதேனு மகாவிஷ்ணுவிடம் சரணடைய வேண்டுமென்று இத்திருத்தலத்தில் தவமிருந்து அது சித்தித்தது. காமதேனு தவமிருந்ததால் ஆ+தன்+ஊர் ஆதனூராயிற்று. இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது. ஒரு சமயம் பிறகு வைகுண்டம் சென்று எம்பெருமானையும், பிராட்டியையும் வழிபட பிராட்டி பூமாலையொன்று பரிசளிக்க, அத்துடன் இந்திர லோகம் சென்ற ப்ருகு அதனை தேவந்திரனுக்குத் தர, அதனையவன் தனது ஐராவதம் என்ற யானைக்குச் சூட்ட அந்த யானை அதனைத் துதிக்கையில் சுற்றி கீழேபோட்டுக் காலால் மிதித்து அப்பாலும் இப்பாலும் அசை போடுவது போன்று அசையஆரம்பித்தது. இதனால் மிக்க சீற்றங்கொண்ட ப்ருகு இந்திரனைச் சபிக்க இந்திரன் எல்லாச் செல்வங்களும், சுகபோகங்களும் இழந்து இறுதியில் திருமாலிடம் பிராயச்சித்தம் கேட்டு நிற்க, அவனை நோக்கிய பிராட்டி, நான் ப்ருகுவுக்கு பார்க்கவி என்ற பெயரில் மகளாகப் பிறந்துவளர்ந்து வருங்காலை திருமால் என்னைத் திருமணஞ் செய்யும்போது நீ அந்த ஸ்தலத்தில் வந்து சேவிப்பாயாக, உனது சாபந்தீரும் என்று கூற அவ்விதமே எம்பெருமான் பார்க்கவியைத் திருமணஞ்செய்யும் போது இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக் கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டுமன்றி அவனையும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார். எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை ஸர்வ தேவர் என்பர். இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன் சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக கருதப்படுகிறது.
932 : _ _ |a திருஆதனூர் கோயில் மூன்று நிலை இராஜகோபுரத்தைப் பெற்றுள்ளது. இரண்டு பிரகாரங்கள் அமைந்துள்ளன. பிரணவ விமானம் எனப்படும் உண்ணாழிகையின் நடுவே கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்குமையன் புஜங்க சயனத் திருக்கோலத்தில் தலையின் கீழே மரக்கால், இடது கையில் ஓலை எழுத்தாணி, காலடியில் காமதேனு திருமங்கையாழ்வார், தாயார் ஸ்ரீரங்க நாயகியார், உற்சவர் அழகிய மணவாளன், தீர்த்தம் சூர்ய புஷ்கரணி கோயிலுக்கு தெற்கே தாமரைத்தடாகம் உள்ளது. தாமரைத் தடாகம் திருமகளுக்குரியது. பார்க்கவி என்பது திருமகளின் மற்றொரு பெயர். எனவே இத்தலம் பார்க்கவ க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
933 : _ _ |a அகோபில மடம்
934 : _ _ |a நரசிம்மபுரம், லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில், புள்ளப்பூதங்குடி, சுவாமிமலை
935 : _ _ |a இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ஊருக்கு நேராகவே பேருந்து வசதி உள்ளது. இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்றுவிடலாம்.
936 : _ _ |a காலை 7.00 -12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
937 : _ _ |a புள்ளம்பூதங்குடி
938 : _ _ |a கும்பகோணம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சுவாமிமலை, கும்பகோணம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000133
barcode : TVA_TEM_000133
book category : வைணவம்
cover images TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-கோபுரம்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-கோபுரம்-0001.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-கோபுரம்-0002.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-விமானம்-0003.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-மண்டபம்-0004.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-மண்டபம்-0005.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-மாடக்கோயில்-0006.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-சயனக்கோலம்-0007.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-சயனக்கோலம்-0008.jpg

TVA_TEM_000133/TVA_TEM_000133_திருஆதனூர்_ஆண்டளக்கும் ஐயன்-கோயில்-யூபத்தூண்-0009.jpg